குடும்பத்தில் ஏற்பட்ட சோகம்; 26 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பிய தாய்லாந்து மன்னரின் மகன்!
26 ஆண்டுகளுக்கு பிறகு தாய்லந்து மன்னரின் இரண்டாவது மகன் நாடு திரும்பியுள்ளார்.
தாய்லாந்து
ஆசிய நாடான தாய்லாந்தில் மன்னராக இருந்த பூமிபோல் அதுலைத்தேஜ் கடந்த 2016ம் ஆண்டு காலமானார். இதனைத் தொடர்ந்து அவரின் மகனான மஹா வஜ்ஜிரளங்கோன் மன்னராக பொறுப்பேற்றார். இவரது இரண்டாவது மூத்த மகனான வச்சரேசோர்ன் விவச்சரவோங்சே (41) அமெரிக்காவில் வசித்து வந்தார்.
நாடு திரும்பியுள்ளார்
இந்நிலையில் தாய்லாந்தில் உள்ள சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்தார். பின்னர் அரச குடும்பத்தால் ஆதரிக்கப்படும் ஆதரவற்ற குழந்தை பராமரிப்புக்கான அறக்கட்டளைக்குச் சென்று, அங்குள்ள அனைவரிடமும் நலம் விசாரித்தார்.
இவர் மன்னரின் மூத்த மகளான இளவரசி பஜ்ரகித்தியபா நரேந்திரா தேப்யவதி கடந்த டிசம்பர் மாதம் முதல் கடுமையான இதய நோயால் கோமா நிலையில் உள்ளார். இவரைப் பார்ப்பதற்காகத்தான் வச்சரேசோர்ன் விவச்சரவோங்சே நாடு திரும்பிரிப்பதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் கூறுகின்றனர்.