என் மகனுக்கு பதவி உயர்வு தராவிட்டால்- சசிகலா அணிக்கு போய்விடுவேன் மிரட்டல் கொடுத்த எம்எல்ஏ!
தன்னுடைய மகனுக்கு ஏடிஎஸ்பி பதவி உயர்வு வழங்காவிட்டால் சசிகலா அணிக்கு சென்று விடுவதாக அதிமுக எம்எல்ஏ மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழகம் முழுவதும் இந்த மாதம் அல்லது அடுத்த மாத முதல் வாரத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டுகிறது. இதானால் காவல் துறையினர் யாருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டாம் என அதிகாரிகள் முடிவெடுத்திருந்தனர்.

இந்தநிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் பூம்புகார் அதிமுக எம்எல்ஏவாக இருப்பவர் பவன்ராஜ். இவரது மகன் குரூப் 1 தேர்வு மூலம் தேர்வு பெற்று தற்போது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் டிஎஸ்பியாக பணியாற்றி வருகிறார். எஸ்பியாக உள்ள தன் மகனுக்கு கூடுதல் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
இல்லாவிட்டால் சசிகலா அணிக்கு சென்று விடுவேன் என்று தமிழக அரசுக்கு பூம்புகார் அதிமுக எம்எல்ஏ பவுன்ராஜ் மிரட்டல் வேண்டுகோள் விடுத்துள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது. பவன்ராஜ் ஆரம்பத்தில் சசிகலாவுக்கு மிகவும் நெருக்கமானவராகவும் டிடிவி அணியில் இருந்தார். பின்னர் திடீரென்று எடப்பாடி அணிக்கு தாவினார். தற்போது சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்துள்ளதால், அவருக்கு ஆதரவாக எப்போது வேண்டுமானாலும் பவுன்ராஜ் மாறலாம் என அதிமுக தலைமை கருதுகிறது.
இதனால் அவரை தனிபட்ட முறையில் கண்காணிப்பிலேயே வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது பவன் ராஜ் மிரட்டல் கோரிக்கை வைத்துள்ளதால், அவரை சமாதனபடுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாம்.
இதற்காக அவரது மகனுக்கு பதவி உயர்வு வழங்க முடிவு செய்து, அதற்கான ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
டிஜிபி அலுவலகத்தில் அவருடன் சேர்ந்து மேலும் சிலருக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான பட்டியலை டிஜிபி அலுவலக அதிகாரிகள் தயாரித்து வருகின்றார்களாம்.
ஓரிரு நாளில் அவருக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என கூறப்படுகிறது.