சித்தியை கொன்ற கொடூர மகன்- குடிக்க பணம் தராததால் ஆத்திரம்
வேலூர் அருகே குடிக்க பணம் தராததால் சித்தியை தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்த மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வேலூர் மாவட்டத்தில் காட்பாடி அருகே லட்சுமண கவுண்டன் புதூரில் வாழ்ந்து வந்தவர் கோவிந்தம்மாள். இவர் வீட்டுக்கு அக்கா மகன் சரவணன் அடிக்கடி வந்து பணம் கேட்பது வழக்கம்.
மது அருந்துவதற்குத்தான் சரவணன் பணம் கேட்பதை புரிந்துகொண்ட சித்தி, இனிமேல் பணம் கேட்டு வராதே என்று கண்டித்திருக்கிறார். சம்பவத்தன்று குடிக்க பணம் கேட்டு நச்சரித்துள்ளார் சரவணன்.
குடிப்பதற்கெல்லாம் என்கிட்ட பணம் கேட்டு வந்து நிற்காதே என்று ஆத்திரமாக திட்டியிருக்கிறார் கோவிந்தம்மாள். இதனால் ஆத்திரமடைந்த சரவணன், சித்தி என்றும் பாராமல் அவர் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்திருக்கிறார்.
அதன்பின்னர் வீட்டில் இருந்த நகை, பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு சரவணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.