தாய் தந்தை என குடும்பத்தையே துடிக்க துடிக்க சுட்டுக்கொலை செய்த மாணவன் - அதிர்ச்சி சம்பவம்
ஹரியானாவில் தாய், தந்தை, பாட்டி, தங்கை ஆகியோரை துடிதுடிக்க கொலை செய்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். அம்மா நிலத்தின் ரோகித் நகரை சேர்ந்த பிரதீப் மாலிக், மனைவி சந்தோஷ் பப்லி, மகள் நேகா, தாயார் ரோஷ்ணிதேவி, மகன் அபிஷேக் மாலிக்குடன் வசித்து வந்தார்.
மகனுக்கும் பிரதீப் மாலிக்கிற்கும் தொழில்ரீதியாக ஏற்பட்ட தகராறு காரணமாக அபிஷாக் குமார் வீட்டில் இருந்து வெளியேறி தனியாக வசித்து வந்திருக்கிறார் .
இந்நிலையில் கடந்த 27-ம் தேதி அன்று வீட்டிற்கு வந்த அவர் தனது தந்தையிடம் தகராறு செய்திருக்கிறார். தகராறின் போது எழுந்த ஆத்திரத்தில் தந்தை என்றும் பாராமல் அவர் துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார்.
இதனால் சம்பவ இடத்திலேயே தந்தை துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதை பார்த்து பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்த தாய், பாட்டி ,தங்கை ஆகியோரையும் அபிஷேக் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார்.
குடும்பத்தில் உள்ள அனைவரும் உயிரிழந்ததால் அபிஷேக் மாலிக் அங்கிருந்து தப்பியோடியுளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அபிஷேக் மாலிக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தான் கொலை செய்ததாக ஒப்புகொண்டுள்ளார்.