தாயை ஈட்டியால் குத்தி கொடூரமாகக் கொலை -பெற்ற மகனின் வெறிச்செயல்!

Uttar Pradesh Crime Murder
By Vidhya Senthil Mar 07, 2025 04:30 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

 பெற்ற மகனே தாயை ஈட்டியால் குத்தி கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

   மகன்  

உத்தரப் பிரதேசம் மாநிலம், கன்பத்பூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார். இவர் தனது தாய் நைனா தேவி ( வயது 60) மற்றும் மனைவி,பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.மதுப் பழக்கத்திற்கு அடிமையான வினோத் குமார், மதுபோதையில் தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

தாயை ஈட்டியால் குத்தி கொடூரமாகக் கொலை -பெற்ற மகனின் வெறிச்செயல்! | Son Kill Mother Fight Wife Uttar Pradesh

இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல் மதுபோதையிலிருந்த வினோத் குமார் தனது மனைவியிடம் தகராறு செய்து அடித்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் நைனா தேவி, தலையிட்டு அந்த சண்டையைத் தடுக்க முயற்சி செய்துள்ளார்.

செலவுக்குப் பணம் கேட்ட மகன்.. தந்தையை கொன்று வீடியோ எடுத்த கொடூரம் - பகீர் பின்னணி!

செலவுக்குப் பணம் கேட்ட மகன்.. தந்தையை கொன்று வீடியோ எடுத்த கொடூரம் - பகீர் பின்னணி!

இதனால் ஆத்திரமடைந்த வினோத் குமார், தனது தாய் நைனா தேவியை ஈட்டியால் குத்தி கொடூரமாகக் குத்தினார். இந்த சம்பவத்தில் பலத்த படுகாயம் அடைந்த நைனா தேவி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார்.

கொலை

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த வினோத் குமார் அங்கிருந்து தப்பிலொன்று தலைமறைவானார்.இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தாயை ஈட்டியால் குத்தி கொடூரமாகக் கொலை -பெற்ற மகனின் வெறிச்செயல்! | Son Kill Mother Fight Wife Uttar Pradesh

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் நைனா தேவி உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள வினோத் குமாரை தேடி வருகின்றனர்.