மாமனாரை சுட்டுக்கொன்றுவிட்டு மருமகன் தற்கொலை - குடும்ப தகராறால் நடந்த கொடூரம்.!

Tamil nadu Crime Tiruppur
By Vidhya Senthil Sep 10, 2024 11:09 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

திருப்பூர் அருகே குடும்ப தகராறு காரணமாக மாமனாரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மருமகன், தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (70). இவருக்கு ஏராளமான சொந்த நிலங்கள் இருக்கும் நிலையில் விவசாயம் செய்து வந்துள்ளார்.

பழனிசாமியின் மகள் அம்பிகாவுக்கு ஹாலோபிளாக் செங்கல் செய்யும் நிறுவனத்தை நடத்தி வந்த ராஜ்குமார் என்பவருடன் சில ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் நடந்துள்ளது.

gun shoot

இதனிடையே மாமனார் பழனிசாமிக்கும், மருமகன் ராஜ்குமாருக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டுக் கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக இரு குடும்பங்களிடையே பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்துள்ளனர்.

இந்த சூழலில் கடந்த மாதம் மீண்டும் சொத்து தகராறு ஏற்பட்டு, மாமனாரும், மருமகனும் சண்டை போட்டுள்ளனர்.

ரத்தம் சொட்ட..சொட்ட.. வாஷிங் மெஷினில் சடலமாக கிடந்த சிறுவன் - நெல்லையை உலுக்கிய கொடூர கொலை!

ரத்தம் சொட்ட..சொட்ட.. வாஷிங் மெஷினில் சடலமாக கிடந்த சிறுவன் - நெல்லையை உலுக்கிய கொடூர கொலை!

இந்நிலையில் இன்று காலை ராஜ்குமார், தனது மாமனார் வீட்டிற்குச் சென்று, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் பழனிசாமியை ஐந்து முறை சுட்டுள்ளார்.

இதில் பழனிசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைக்கண்ட ராஜ்குமார் தன்னைத்தானே நெற்றியில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 குடும்ப தகராறு

இந்த சம்பவம் குறித்துக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த மாமனார் மற்றும் மருமகன் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

crimnr

இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் அருகே சொத்துத் தகராறு காரணமாக மாமனார் ,மருமகன் சுட்டுக் கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.