பஸ் ஸ்டாண்ட்னு கூட பாக்கல.. மாமியார் கையை பிடித்து இழுத்து மருமகன் செய்த செயல்!

Relationship Crime Tirunelveli
By Sumathi Aug 19, 2025 06:36 AM GMT
Report

மருமகன், மாமியாரின் விரலைக் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாமியாருடன் வாக்குவாதம் 

நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரம் பகுதியை சேர்ந்தவர் சுடலை மகன் துரைராஜ் (33). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தங்கலட்சுமிக்கும் திருமணம் நடந்துள்ளது.

பஸ் ஸ்டாண்ட்னு கூட பாக்கல.. மாமியார் கையை பிடித்து இழுத்து மருமகன் செய்த செயல்! | Son In Law Bit His Mother In Laws Finger Nellai

இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் தங்கலட்சுமி கணவரை பிரிந்து, குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார்.

சம்பவத்தன்று, தங்கலட்சுமி தனது குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதற்காக அங்குள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வந்தார். அப்போது அங்கு வந்த துரைராஜ், தனது மனைவியிடம் பேசி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

காதலிக்க மறுத்த பெண்; 30 ஆண்டுகளாக துன்புறுத்தியவர் நபர் - கொடூர சம்பவம்!

காதலிக்க மறுத்த பெண்; 30 ஆண்டுகளாக துன்புறுத்தியவர் நபர் - கொடூர சம்பவம்!

மருமகன் வெறிச்செயல்

உடனே தங்கலட்சுமி தனது செல்போன் மூலம் தாய் பேச்சியம்மாளை தொடர்புகொண்டு நடந்ததை கூறியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடம் விரைந்த தாய் மருமகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பஸ் ஸ்டாண்ட்னு கூட பாக்கல.. மாமியார் கையை பிடித்து இழுத்து மருமகன் செய்த செயல்! | Son In Law Bit His Mother In Laws Finger Nellai

இதில் ஆத்திரத்தில், மருமகன் பேச்சியம்மாளின் கையை பிடித்து இழுத்து அவரது விரலை கடித்து துப்பியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த பேச்சியம்மாளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.