மகனின் அஸ்தியை கரைக்கும் போது தாயும் கடலில் கரைந்த சோகம்!
சென்னையில் மகனின் அஸ்தியை கரைக்க சென்ற போது, மகன் சென்ற இடத்திற்கு செல்வதாக கூறி தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெருங்களத்தூர் பகுதியில் வசித்து வந்த கோகுலன், கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 22-ம் தேதி கல்லூரியில் இருந்து சென்னை பெருங்களத்தூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த துக்கத்தில் இருந்து மீளமுடியாமல் அவரது தாயார் வேதனையிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மகனின் அஸ்தியை கரைக்க கோவளம் கடற்கரைக்கு சென்றுள்ளார்.
அப்போது மகன் சென்ற இடத்திற்கே தானும் செல்லப்போவதாக கூறி, கடலில் மூழ்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.