மருத்துவரை கத்தியால் குத்தியதற்கு காரணம் இதுதான் - இளைஞர் விக்னேஷின் தாயார் உருக்கம்!

Tamil nadu Attempted Murder Chennai
By Swetha Nov 14, 2024 04:52 AM GMT
Report

மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர் விக்னேஷின் தாயார் சம்பவம் குறித்து விளக்கமாளித்துள்ளார். 

மருத்துவர் கத்தி குத்து

சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இன்று வழக்கம்போல் நோயாளிகள் சிகிச்சைக்காக வந்திருந்தனர்.அப்போது மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவின் சிறப்பு மருத்துவர் பாலாஜியிடம் 4 பேர் தகராறு செய்துள்ளனர்.

மருத்துவரை கத்தியால் குத்தியதற்கு காரணம் இதுதான் - இளைஞர் விக்னேஷின் தாயார் உருக்கம்! | Son Did This Out Of Mother Affection Says Boys Mom

பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியால் மருத்துவர் பாலாஜியை குத்தியுள்ளனர். சம்பவ இடத்திலேயே மருத்துவர் பாலாஜி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தவர்கள், மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய விக்னேஷ் என்ற இளைஞரை பிடித்தனர்.

பிறகு தாக்குதல் நடத்திய காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது மகன் கைது செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விக்னேஷின் தாயார் பிரேமா, "கிண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றபோது எனக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை.

டாக்டர் பாலாஜி எப்பொழுதும் அவ மரியாதையாக பேசுவார். மருத்துவ பரிசோதனை அறிக்கையை கூட பார்க்க மாட்டார். விக்னேஷ் என்னுடன் இருந்து என்னை கவனித்துக்கொண்டான். டாக்டர் பாலாஜிக்கும் எங்களுக்கும் எந்த முன்விரோதமும் இல்லை.

மருத்துமனையில் கத்திக்குத்து - வேலைநிறுத்தத்தை தொடங்கிய மருத்துவர்கள்

மருத்துமனையில் கத்திக்குத்து - வேலைநிறுத்தத்தை தொடங்கிய மருத்துவர்கள்

விக்னேஷின் தாயார்

என் தாயின் நுரையீரல் பாதிப்பு குறித்து ஏன் சொல்லவில்லை என்பதே என் மகனின் ஆதங்கம். அவர் செய்தது சரி என்று நான் சொல்லவில்லை. தாய்ப் பாசத்தில் செய்து விட்டான். அவனும் இருதய நோயாளி. அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவன்.

மருத்துவரை கத்தியால் குத்தியதற்கு காரணம் இதுதான் - இளைஞர் விக்னேஷின் தாயார் உருக்கம்! | Son Did This Out Of Mother Affection Says Boys Mom

எனக்கு புற்றுநோய் இரண்டாவது நிலையில் இருந்தபோது சிகிச்சைக்கு சென்றேன். ஆனால் எனக்கு 5-வது நிலைபுற்றுநோய் இருந்ததாக வதந்திபரப்பப்படுகிறது. வீட்டை காவல் துறையினர் சோதனையிட்டு, என்மருத்துவ ஆவணம், என் மகனின் சில ஆவணங்கள் உள்ளிட்ட வற்றை எடுத்துச் சென்றுள்ளனர்.

நேற்று முன்தினம் எனக்கு சுவாசக்கோளாறு அதிகமானதால் தனியார் மருத்துவமனைக்கு சென்றேன். நான் உயிர் பிழைக்க மாட்டேன் என்று டாக்டர்கள் சொன்னார்கள். டாக்டரை அவன் கத்தியால் குத்தியது எனக்கு தெரியாது. அது தவறுதான்.

என் மேல் இருக்கும் பாசத்தால் நான் படும் அவஸ்தையால் இந்த முடிவை எடுத்திருக்கிறான். அவனுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது. அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையான சிகிச்சை அளிக்காததால் நுரையீரல் பாதிக்கப்பட்டு சுவாசக்கோளாறு ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளார்.