கொடுமை தாங்கல... தந்தையை 30 துண்டுகளாக வெட்டி வீசிய 20வயது மகன்!

Attempted Murder Karnataka Crime
By Sumathi Dec 14, 2022 06:28 AM GMT
Report

தந்தையை கொன்று, 30 துண்டுகளாக வெட்டி மகன் கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொடுமை

கர்நாடகா, பாகல்கோட் பகுதியைச் சேர்ந்தவர் பரசுராம்(53). அவரது மகன் வித்தலா(20). இந்நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தொடர்ந்து, தகராறில் மகன், தந்தையை இரும்பு கம்பியால் மோசமாக தாக்கியுள்ளார்.

கொடுமை தாங்கல... தந்தையை 30 துண்டுகளாக வெட்டி வீசிய 20வயது மகன்! | Son Cut His Father Into 30 Pieces In Karnataka

இதில் சம்பவ இடத்திலேயே தந்தை உயிரிழந்துள்ளார். அதன்பின், தந்தையின் உடலை 30 துண்டுகளாக வெட்டி முதோல் நகர் புறநகர் பகுதிக்கு சென்று அங்கே அவர்களுக்கு சொந்தமான பண்ணையில் உள்ள திறந்தவெளி ஆழ்துளை கிணற்றில் வீசியுள்ளார்.

தந்தை கொலை

அதனயடுத்து போலீஸாரின் விசாரணையில், இதுகுறித்த உண்மைகள் தெரியவந்துள்ளது. மேலும், தந்தை

மது அருந்தி விட்டு வந்து தன்னிடம் தகராறு செய்து வந்ததால், கொடுமை தாங்க முடியாமல் இரும்பு கம்பியை அடித்து கொன்றதாக மகன் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.