ஆம்புலன்ஸ் இல்லை: இறந்த தாயின் உடலை மோட்டர் சைக்கிலில் எடுத்துச் சென்ற மகன்
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்திலுள்ள பளாசா மண்டலம் கில்லோயி கிராமத்தை சேர்ந்தவர் செஞ்சு (51). கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட செஞ்சுவை அவருடைய மகன் நரேந்திரா, உறவினர் ரமேஷ் ஆகியோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
செஞ்சுவை பரிசோதித்த மருத்துவர் சில பரிசோதனைகளை எழுதி கொடுத்து அவற்றை செய்து வருமாறு கூறி அனுப்பி வைத்தார். எனவே நரேந்திரா, ரமேஷ் ஆகியோர் செஞ்சுவையை பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக தனியார் ஆய்வகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு டாக்டர் எழுதி கொடுத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் பரிசோதனை முடிவுகள் மூன்று பேரும் காத்திருந்தனர். அப்போது திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டு செஞ்சு பரிதாபமாக மரணம் அடைந்தார்.
சற்று நேரத்தில் வந்த பரிசோதனை முடிவுகள் அவருக்கு கொகரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதை உறுதிப்படுத்தின.
இந்த நிலையில் செஞ்சு உடலை வீட்டுக்கு கொண்டு செல்ல அவருடைய மகன் நரேந்திரா முயற்சிகளை மேற்கொண்டார்.
ஆனால் செஞ்சு கொரோனா காரணமாக மரணம் அடைந்த தகவலால் அவருடைய உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் டிரைவர்கள் உட்பட யாரும் முன் வரவில்லை.
எனவே நரேந்திரா, ரமேஷ் ஆகியோர். செஞ்சு உடலை தங்கள் மேட்டார் சைக்கிளில் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தங்கள் ஊருக்கு எடுத்து சென்றனர்.