தாயின் உடலை இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற அவலம் - நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சி

covid19 india son carried dead mother
By Irumporai Apr 28, 2021 06:50 AM GMT
Report

கொரோனா காரணமாக மரணமடைந்த தாயின் உடலை 20 கிலோ மீட்டர் தூரம் மோட்டார் சைக்கிள் எடுத்து சென்ற சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்திலுள்ள பளாசா மண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் செஞ்சு (51). இவர் தனது மகன் நரேந்திராமற்றும் தனது உறவினரோடு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்

. மருத்துவ மனையில் செஞ்சுவை பரிசோதித்த மருத்துவர் சில பரிசோதனைகளை எடுக்குமாறு அனுப்பி வைத்தார்.

எனவே நரேந்திரா,ரமேஷ் ஆகியோர் செஞ்சுவையை பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக தனியார் ஆய்வகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு மருத்துவர் எழுதி கொடுத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. செஞ்சுவின் பரிசோதனை முடிவுகளுக்காக மூன்று பேரும் காத்திருந்தனர். அப்போது திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டு செஞ்சு பரிதாபமாக மரணம் அடைந்தார்.

சற்று நேரத்தில் வந்த பரிசோதனை முடிவுகள் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதை உறுதிப்படுத்தின.

இந்த நிலையில் செஞ்சு உடலை வீட்டுக்கு கொண்டு செல்ல அவருடைய மகன் நரேந்திரா முயற்சிகளை மேற்கொண்டார்.

ஆனால் ,செஞ்சு கொரோனா காரணமாக மரணம் அடைந்த தகவலால் அவருடைய உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் டிரைவர்கள் உட்பட யாரும் முன் வரவில்லை.

ஆகவே, நரேந்திரா, அவரது உறவினர் ரமெஷ் ஆகியோர். செஞ்சு உடலை தங்கள் மேட்டார் சைக்கிளில் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தங்கள் ஊருக்கு எடுத்து சென்றனர்

. கொரோனா சமயத்தில் இந்த சோக சம்பவம் ஆந்திர மக்களிடையே அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.