தாய்மாமனின் துரோகத்தை போட்டுடைத்த மருமகன்! தேர்தல் களத்தில் பரபரப்பு சம்பவம்
தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிராக அவரது அக்கா மகனான தென்னரசு சாம்ராஜ் அமமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார். வருகிற சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாவது முறையாக ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார் அமைச்சர் கேசி வீரமணி.
இவரை எதிர்த்து அத்தொகுதியில் அமமுக சார்பில் தென்னரசு சாம்ராஜ் என்பவர் களமிறங்கியுள்ளார். இவர் வீரமணியின் சொந்த அக்கா மகனாவார். தன்னுடைய தாய்மாமனை எதிர்த்து போட்டியிடும் தென்னரசு சாம்ராஜ், என் மாமன் வீரமணி ஜெயித்தால் நான் இந்த ஊரிலேயே இருக்க மாட்டேன், கடந்த 9 ஆண்டுகளாக நம்மை ஆட்டி வைத்து இருக்கிறார்.
வெறும் பீடி சுற்றி திரிந்தவர் சொகுசு காரில் வலம் வருகிறார், அவருக்கு எப்படி இந்த சொத்துகள் வந்தது? என் அப்பாவால் வளர்ந்தவர் வீரமணி.
மக்களின் பணத்தால் சீரும் சிறப்புமாக உள்ளார். தொகுதியை டெவலப் செய்யாமல் அவர் தன்னை மட்டும் டெவலப் செய்து கொண்டார்.
என் மாமா மாதிரி நான் துரோகம் செய்ய மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.