அப்பா எங்கே? மகன் கேட்பதற்கு பதில் சொல்லமுடியாமல் தவிக்கும் பெண்
காஷ்மீர் தாக்குதலில் கணவனை இழந்த பெண் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் தாக்குதல்
காஷ்மீரில் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நேபாளத்தைச் சேர்ந்தவர் உட்பட 28 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தாக்குதலில் உயிரிழந்தவர் ஒருவரின் மனைவி, தனது மகன் அப்பா எங்கே என்று அடிக்கடி கேட்பதாக வேதனை தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பிடன் அதிகாரி என்பவர் தனது மனைவி மற்றும் 3 வயது குழந்தையுடன் அமெரிக்காவில் வசித்து வந்தார்.
தாய் வேதனை
கடந்த 8 ஆம் தேதி சொந்த ஊருக்கு வந்த அவர், தனது மனைவி மற்றும் மகனுடன் பஹல்காம் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போதுதான் மனைவி மற்றும் மகனின் கண்முன்னே கொடூரமாக பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து பிடன் அதிகாரியின் மனைவி கூறியபோது,
“பயங்கரவாதிகள் என் குழந்தையின் கண் முன்னே என் கணவரை சுட்டுக் கொன்றனர். இப்போது, அப்பா எங்கே என என் மகன் அடிக்கடி கேட்கிறான். அப்பா இனி வரமாட்டார் என்று அவனிடம் எப்படி சொல்வது என்றே தெரியாமல் தவிக்கிறேன்” என பேசியுள்ளது நெஞ்சை உலுக்கியுள்ளது.

மிதுன ராசியில் குருபகவான்: இந்த 4 நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஜாக்பாட் உங்க நட்சத்திரம்? Manithan

இந்தியா கைகளில் எடுத்துள்ள முக்கிய ஆயுதம்? கொம்பேறிமூக்கனாக மாற இருக்கும் இந்திய உளவுப் படை!! IBC Tamil
