காணாமல் போன மகன் - 6 வருடங்களாக தேடி கண்ணீரோடு அலைந்த தாய் - அடையாளம் காட்டிய ஆதார்கார்டு - நெகிழ்ச்சி சம்பவம்

son Mom Searching 6-years Aadharcard Flexibility incident மகன் தாய் தேடுதல் ஆதார்கார்டு
By Nandhini Mar 13, 2022 12:28 PM GMT
Report

கர்நாடகா மாநிலம், பெங்களூர், எலஹங்காவை சேர்ந்தவர் பார்வதி. இவருக்கு பரத் என்ற மகன் உள்ளார். பரத் ஒரு மாற்று திறனாளி. சிறுவயதிலிருந்தே அவரால் வாய் பேச முடியாது.

கடந்த 2016ம் ஆண்டு திடீரென்று பரத் காணாமல் போய்விட்டார். தாய் பார்வதி எங்கெல்லாமோ தேடியும் மகன் கிடைக்கவில்லை.

மனதால் நொறுங்கி கதறி துடித்து மகனை தேடி வந்துள்ளார். மகன் எங்கும் கிடைக்காததால், எலஹங்கா காவல்நிலையத்தில் பார்வதி புகார் கொடுத்தார். வருடங்கள் ஆனது. மகன் எங்கும் கிடைக்கவில்லை.

இதனால், கோவில் கோவிலாக மகன் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வந்துள்ளார் பார்வதி. 2016ம் ஆண்டு காணாமல் போன பரத்தை யாரோ நாக்பூருக்கு அழைத்து சென்றுவிட்டனர்.

இதனையடுத்து 6 வருடங்களாக தாயை பிரிந்து பரத் தவித்து வந்துள்ளார். இதை அறிந்த ஒருவர் பரத்திற்கு உதவ முன்வந்தார்.

உடனடியாக பரத்தை, மாநகராட்சி அலுலகத்திற்கு பரத்தை அழைத்து வந்து, விவரத்தை கூறியுள்ளார். பரத்தின் ஆதார்கார்ட்டையும், அவனது விழித்திரையையும் மாநகராட்சி அலுவலத்தினர் ஒப்பிட்டுப் பார்த்தனர்.

இதனையடுத்து, எலஹங்கா காவல்நிலையத்திற்கு பரத் பற்றிய தகவல் கிடைத்தது. உடனடியாக, போலீசார் பார்வதிக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து உடனே, நாக்பூருக்கு பார்வதி விரைந்து சென்றார்.

தன் மகன் தற்போது நன்கு வளர்ந்திருப்பது கண்டு ஆனந்த கண்ணீர்விட்டு, மகனை ஆரத்தழுவி முத்தமிட்டார்.

சிறுவயதில் காணாமல் போன வாய் பேச முடியாத மகனை தேடி வந்த தாயும், தாயை பிரிந்து தவித்து வந்த மகனும், 6 வருடங்களுக்குப் பிறகு இணைந்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

காணாமல் போன மகன் - 6 வருடங்களாக தேடி கண்ணீரோடு அலைந்த தாய் - அடையாளம் காட்டிய ஆதார்கார்டு - நெகிழ்ச்சி சம்பவம் | Son 6 Years Searching Mom Aadharcard

காணாமல் போன மகன் - 6 வருடங்களாக தேடி கண்ணீரோடு அலைந்த தாய் - அடையாளம் காட்டிய ஆதார்கார்டு - நெகிழ்ச்சி சம்பவம் | Son 6 Years Searching Mom Aadharcard