எம்ஜிஆர் சிலையின் முகத்தில் பெயிண்ட் ஊற்றி அவமதித்த மர்ம நபர்கள் - கொந்தளித்த அதிமுகவினர்!

MGR ADMK
By Vinothini Aug 02, 2023 07:35 AM GMT
Report

சென்னையில் எம்ஜிஆர் சிலை மீது பெயிண்ட் ஊற்றியா சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எம்ஜிஆர் சிலை

சென்னை, ராயபுரத்தில் உள்ள காளிங்கராயன் தெருவில் எம்.ஜி.ஆர் சிலை ஒன்று உள்ளது. அதில் மர்மநபர்கள் சிலர் சிவப்பு கலர் பெயிண்ட்டை ஊற்றி அவமதித்துள்ளனர். இதனை கண்ட அதிமுகவினர் சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர்.

someone-has-poured-paint-on-mgr-statue

மேலும், அதிமுகவை அவமதிக்கும் வகையில் செய்த இவ்வாறான செயல்களால் கொந்தளித்தனர். அதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு சூழல் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து, தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

இவ்வாறான செயல்களை செய்தவர்களை கண்டறிய தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.