எப்படியோ வெளியில் கசிந்து விட்டது: செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிச்சாமி
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியும் மாறி மாறி தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு செய்யும் நல திட்ட உதவிகளை அறிவித்து வருகின்றனர். கடந்த ஞாயிறன்று (07.03.2021) திருச்சியில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழக முதல்வரான எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார், அத்துடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
மேலும் தங்களுடைய திட்டம் முன்கூட்டியே கசிந்துவிட்டதால் திமுக அறிவித்து விட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
இரு கட்சிகளுக்கும் முன்பாகவே, கமல்ஹாசன் இத்திட்டம் குறித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.