நீண்ட உறக்கத்தில் உள்ளார் ஸ்டாலினை யாராவது எழுப்புங்கள்- குஷ்பு கிண்டல்

Kushboo Crime
By Irumporai Feb 14, 2023 05:43 AM GMT
Report

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பின்புறம் பல்வேறு கடைகள் மற்றும் வழக்கறிஞர்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

  கோவை கொலை வழக்கு

இந்த நிலையில் அப்பகுதிக்கு வந்த இரு இளைஞர்கள் மீது ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் சரமாரி தாக்கி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

   குஷ்பு கிண்டல்

அப்போது மர்ம கும்பல் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிர் இழந்தார். மற்றொருவர் ரத்த காயங்களோடு தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவத்தின் போது கொலை செய்த கொலையாளிகள் சர்வசாதாரணமாக நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

நீண்ட உறக்கத்தில் உள்ளார் ஸ்டாலினை யாராவது எழுப்புங்கள்- குஷ்பு கிண்டல் | Somebody Wake Up Stalin Khushbu

இது தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், ரத்தினபுரியைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் கடந்த 2021 அன்று கொல்லப்பட்டார். அதில், கோகுல் உள்ளிட்ட 5 பேருக்கு தொடர்பு இருந்துள்ளது. இந்த கொலைக்கு பழிவாங்குவதற்காக கோகுல் கொல்லப்பட்டு இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் பட்டப்பகலில் நடைபெற்ற கொலை சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில் பாஜக நிர்வாகி குஷ்பு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

கோவை நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கற்ற நிலை உள்ளதாக தெரிவித்தவர், யாராவது அவரை முதல்வர் ஸ்டாலினை எழுப்பி உண்மையான படத்தைக் காட்ட முடியுமா? நீண்ட நாட்களாக உறக்கத்தில் இருந்துள்ளார் என குஷ்பூ விமர்சித்துள்ளார்.