‘என் மரணத்தை விரும்பும் சிலர்’ - திடுக்கிட வைக்கும் போப் ஆண்டவர்

popefrancis Conservative Critics
By Petchi Avudaiappan Sep 22, 2021 06:30 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

 என் மரணத்தை சிலர் விரும்புகின்றனர் என போப் பிரான்சிஸ் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

84 வயதான போப் ஆண்டவர் பிரான்சிஸ் சமீப காலமாக உடல் நலக்கோளாறுகளால் அவதிப்பட்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு கூட வயிற்று வலியால் அவதிப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.

சமீபத்தில் உடல்நலம் குறித்து போப் பிரான்சிஸிடம் ஒருவர் விசாரித்தபோது விளையாட்டாக சில வார்த்தைகளை கூறியுள்ளார். அதாவது நான் இப்போதும் உயிருடன்தான் இருக்கிறேன். ஆனால் சிலர் நான் மரணமடைய வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

நான் மரணமடைந்து விடுவேனோ என்ற எண்ணத்தில் அடுத்தகட்டமாக செய்ய வேண்டியது குறித்து கூட்டம் எல்லாம் நடத்துவதற்கும் தயாராகி விட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

பொதுவாக போப் ஆண்டவர் மரணமடைந்துவிட்டாலோ அல்லது ஓய்வு பெற்றாலோ ‘கர்தினால்கள்’ ஒன்றுகூடி புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வது வழக்கம். இதைதான் அவர் மறைமுகமாக குறிப்பிட்டு இந்த வார்த்தையை விளையாட்டாக கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.