3 மாநிலத்தில் ஆட்சியை கவிழ்க்க பயங்கர சதி - சிவசேனா சொன்னா தகவலால் பரபரப்பு
சிவசேனை கட்சியின் மூத்த தலைவரும், எம்பியுமான சஞ்சய் ராவத் 3 மாநிலத்தில் ஆட்சியை கவிழ்க்க பயங்கர சதி நடைபெறுவதாக கூறி அரசியல் வட்டாரத்தை அதிர வைத்துள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜகவைச் சேர்ந்த சில தலைவர்கள் என்னை தொடர்பு கொண்டதாகவும், மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க உதவுமாறு அழைப்பு விடுத்ததாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும் இதனை செய்யாமல் இருந்தால் அதன் எதிர் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என தன்னை எச்சரித்ததாகவும் சஞ்சய் கூறியுள்ளார். அதன்பிறகு தான் எனக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் நெருக்கமானவர்களுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கினர்.
குறிப்பாக மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க சதி வேலைகள் நடைபெற்று வருகின்றன. உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்ட்ரா அரசை கவிழ்க்க மத்திய விசாரணை அமைப்புகள் பயன்படுத்தப்படுவதாகவும் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். இதனால் தேசிய அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.