தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சட்டம் ஒழுங்கை சிலர் கெடுக்க நினைக்கின்றனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

M K Stalin Government of Tamil Nadu
By Thahir Mar 14, 2023 09:12 AM GMT
Report

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிலர் சட்டம் ஒழுங்கை கெடுக்க நினைக்கிறார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடங்கி வைத்தார் முதலமைச்சர் 

சென்னை நந்தம்பாக்கத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் BRIDGE கருத்தரங்கு நடைபெற்றது.

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சட்டம் ஒழுங்கை சிலர் கெடுக்க நினைக்கின்றனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Some People Want To Destroy Law And Order Stalin

BRIDGE’23 கருத்தரங்கினைத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். அதன் பின் பின்னர் பேசிய அவர்,

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த திட்டங்களில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. தரவுகள் தான் இந்த காலத்தின் முக்கிய எரிபொருள், அதற்காக புதிய கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கை கெடுக்க முயற்சி 

வதந்திகளை பரப்பி, சட்டம் ஒழுங்கை கெடுக்க, சிலர் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். கையடக்க தொலைபேசியில் அனைத்து புத்தகங்களும் கிடைக்கின்றன.

எல்லா துறைகளிலும், தொழில்நுட்பம் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வித்திட்டவர் கருணாநிதி.

ஐடி துறையில் தமிழகம் முதலிடத்தை பிடிக்க திராவிட மாடல் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இளைய தலைமுறை தகவல் தொழில்நுட்பத்தை தங்களின் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்; ஆன்லைன் ரம்மி விளையாட்டு மனித உயிர்களை பலிவாங்குகிறது என குற்றம்சாட்டியுள்ளார்.