கூகுளில் இவற்றை தேடினால் கிரிமினல் குற்றம்: வெளியான அதிரடி அறிவிப்பு

Google Crime
By Irumporai Jan 15, 2023 07:50 AM GMT
Report

கூகுளில் ஒரு சிலவற்றை தேடினால் கிரிமினல் சட்டம் பாயும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூகுளில் இது குற்றம் 

இன்றைய டிஜிட்டல் உலகில் நமக்கு தேவையான விஷயங்களை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய செயலியாக கூகுள் உள்ளது.


 கிரிமினல் குற்றமாகும்

பொதுவாக கூகுளில் அனைத்து விஷயங்களையும் தேடலாம் என்பதும் அனைவரும் அறிந்ததே. ஆனால் அதே நேரத்தில் குண்டு தயாரிப்பது எப்படி என்று தேடினால் சைபர் கிரைம் கண்காணிப்பில் இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி குண்டு வெடிப்பு தகவலை திரட்டினாலே அது சிறை தண்டனைக்கு உள்ளாக்கும் குற்றமாகும் அதே போல் 18 வயதுக்கு குறைவான குழந்தைகளின் ஆபாச படத்தை தேடினால் போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை நிச்சயம் உண்டு.

கூகுளில் இவற்றை தேடினால் கிரிமினல் குற்றம்: வெளியான அதிரடி அறிவிப்பு | Some Google Searches Are Criminal

மேலும் கிரிமினல் குற்றங்கள் சார்ந்த கேள்விகளை இணையத்தில் கேட்பது கருக்கலைப்பு தொடர்பான தகவலை தேடுவது. காப்புரிமை உள்ள சினிமாக்களை தேடுவது ஆகியவை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.