அதிபருடன் கருத்து வேறுபாடு - பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர்

somalia pm suspended
By Petchi Avudaiappan Dec 27, 2021 09:44 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

அதிபருடன் கருத்து வேறுபாடு சோமாலியா பிரதமர் பதவி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல்  கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில்அதிபராக இருந்து வரும்  முகமது பர்மாஜோவின் பதவி காலம் கடந்த பிப்ரவரி மாதம் முடிந்த நிலையில் மேலும் 2 ஆண்டுகளுக்கு தனது பதவி காலத்தை அவர் நீட்டித்து கொண்டார்.

இந்த விவகாரத்தில் அவருக்கும் பிரதமர் முகமது உசேன் ரோபலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அங்கு கடந்த மாதம் நடக்க இருந்த பொதுத்தேர்தல் தள்ளிப்போனது.

இதனையடுத்து  பிரதமர் ரோபல் கடற்படைக்கு சொந்தமான நிலத்தை தனது தனிப்பட்ட நலனுக்காக அபகரித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் ரோபல் தன் மீதான குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தார். 

 இந்த நிலையில் பிரதமர் ரோபல் மீதான ஊழல் குற்றச்சாட்டை காரணம் காட்டி அதிபர் பர்மாஜோ நேற்று அவரை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.மேலும் இந்த விவாகரத்தில் சோமாலியா கடற்படை தளபதியும் பதவி  நீக்கம் செய்யப்பட்டார். இது சோமாலியா அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.