பேரறிவாளனை விடுவிப்பதே ஒரே தீர்வு - உச்ச நீதிமன்றம் கருத்து!

By Irumporai Apr 27, 2022 07:06 AM GMT
Report

பேரறிவாளனை ஏன் விடுவிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் கேள்விஎழுப்பியுள்ளது. பேரறிவாளனை ஏன் விடுவிக்கக் கூடாது? என உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர்ராவ் அமர்வு கேள்வி எழுப்பினார். யார் விடுவிக்க வேண்டும் என்பதில் உள்ள சிக்கல்களில் பேரறிவாளன் ஏன் சிக்கவேண்டும்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

பேரறிவாளன் விவகாரத்தில் இன்னும் ஆளுநர் முடிவெடுக்காமல் இருக்கிறார் என பேரறிவாளன் தரப்பு வாதம் தெரிவித்த நிலையில்.

ஆளுநர் அல்லது குடியரசு தலைவர் அதிகாரம் குறித்த விஷயங்களுக்குள் போகாமல் நாங்கள் ஏன் பேரறிவாளனை விடுதலை செய்ய உத்தரவிட கூடாது என கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் அவரை விடுவிப்பது மட்டும் தான் இந்த வழக்கை முடித்து வைப்பதற்கான ஒரே தீர்வு என நாங்கள் நினைக்கிறோம் என கூறினர்.   

மேலும், இந்த விவகாரத்தில் குடியரசு தலைவருக்கு தான் அதிகாரம் உள்ளது. இன்று சொல்லப்போனால் ஆளுநர் செயல்படும் விதம் குறித்து கூட குடியரசு தலைவர் தான் முடிவெடுக்க முடியும்: மத்திய அரசு இதை அரசியல் சாசன பிரிவு 72 மிகத்தெளிவாக கூறுகிறது:மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது.

இந்த நிலையில் மாநில அரசு ஒரு பரிந்துரையையோ, முடிவையோ ஒப்புதலுக்கு அனுப்புகிறது. அது பிடித்தால் ஆளுநரே ஒப்புதல் தருவார், பிடிக்கவில்லை என்றால் குடியரசு தலைவருக்கு அனுப்பிவிடுவாரா? எந்த அடிப்படையில் ஆளுநர் பேரறிவாளன் விவகாரத்தில் முடிவெடுத்தார்: உச்சநீதிமன்றம் சரமாறி கேள்விஎழுப்பியது.

பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் முடிவு ஒவ்வொரு முறையும் முரண்பட்டதாக இருக்கிறது இதனால் பலமுறை வழக்கை தேவையே இல்லாமல் ஒத்தி வைக்க வேண்டிய சூழல் உள்ளது: பேரறிவாளன் விவகாரத்தில் தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.