அடுத்தடுத்து சாலமன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - மக்கள் அலறி அடித்து ஓட்டம் - சுனாமி எச்சரிக்கை
சாலமன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த பயங்கர நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் 5.6 ரிக்டர் அளவாக பதிவானது. இந்த நிலநடுக்கம் சியாஞ்சூர் பகுதியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
நிலநடுக்கத்தில் கட்டிடங்கள், வீடுகள் தரைமட்டமாயின. ஆயிரக்கணக்கான வீடுகள் நிலநடுக்கத்தால் குலுங்கின. இதனால், மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர்.
கட்டிட இடிபாடுகளில் சிக்கி சுமார் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் மேற்கு ஜாவா மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பலி எண்ணிக்கை 162ஆக உயர்வு
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 162ஆக அதிகரித்துள்ளது. 2200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் மீட்புப் படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

சாலமன் தீவில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை
இந்நிலையில், சாலமன் தீவுகளில் உள்ள தெற்கு மலாங்கோ பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் இந்த நிலநடுக்கம் 7ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தின் அதிர்வால் வீடுகள், அலுவலகங்கள், கடைகள் பயங்கரமாக குலுங்கின.
இந்த நிலநடுக்கத்தால் பயந்துபோன மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். சாலமன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
DEVELOPING: The Solomon Islands has been hit with a series of earthquakes in the last hour, with the largest recording a magnitude of 6.9, according to Geoscience Australia.
— 9News Australia (@9NewsAUS) November 22, 2022
There is currently no tsunami threat to Australia.
More to come.
EXTRA: https://t.co/sbjkERinWz#9News pic.twitter.com/d3DPXgrF2L
November 22, 2022
— CLIMATE Change ?️?❄️ (@weatheralert15) November 22, 2022
?? #Solomon | a magnitude-7.3 earthquake struck near the Solomon Islands#Earthquake #sismo #Tsunami
? More videos in Youtube Channel: https://t.co/ledGWwhwZS pic.twitter.com/UAjQrTia0e