வாக்காளர்களை சுடுவதற்கு சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது? மம்தா ஆவேசம்

people shoot dead mamata crpf
By Jon Apr 11, 2021 05:44 PM GMT
Report

வாக்களிக்க வந்த வாக்காளர்களை சுடும் தைரியம் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு எப்படி வந்தது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ள 44 தொகுதிகளுக்கான 4-ஆம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது இதில் கூச்பிகார் மாவட்டத்தில் உள்ள சிதல்குச்சி பகுதியில் வாக்களிப்பு நடந்து கொண்டிருந்தபோது நடந்த தகராறில் 4 வாக்களார்களை மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து 5ஆம் கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த மம்தா பானர்ஜி கூறும்போது வரிசையில் நின்று கொண்டிருந்த வாக்காளர்களை கொல்லும் தைரியம் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு எங்கிருந்து வந்தது என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், சிஆர்பிஎஃப் எனது எதிரி அல்ல, ஆனால் உள்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின் கீழ் சதிகள் நடக்கிறது. அதற்கு இன்றைய சம்பவம் ஒரு சான்றாக அமைந்துள்ளது எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் 4 வாக்காளர்களை சிஆர்பிஎஃப் வீரர்கள் சுடவில்லை என மத்திய ரிசர்வ் காவல் படை மறுப்பு தெரிவித்துள்ளது.