காதலியை விற்ற காதலன்...பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் - நடந்தது என்ன?
பெண்ணை கடத்திய வழக்கில் பீகார் உத்தராகண்ட், உத்தர பிரதேசம் மாநிலங்களைச் சேர்ந்த 6 பேரை சிஐடி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சோசியல் மீடியாவில் பழக்கம்
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, பெண்(22) தற்போது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.கடவுளின் அருளால் எங்கள் மகள் எங்களிடம் திரும்ப வந்திருக்கிறாள். நடந்தவை நடந்துவிட்டது. அவளது துயரங்களுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டுவிட்டார்கள்" என்று அந்த பெண்ணின் தந்தை கூறியிருக்கிறார்.
அந்த பெண்ணின் தந்தை ஒரு துணிக்கடையில் வேலை செய்கிறார். இப்போது அந்த பெண்ணுக்கு மாப்பிள்ளைப் பார்க்கத் தொடங்கியிருக்கின்றனர். கைது செய்யப்பட்ட 6 பேரில் நான்கு பேருக்கு போக்சோ நீதிமன்றத்தால் 20 ஆண்டுகள், 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டது.
காதலியை விற்ற காதலன்
ஏழு வருடங்களுக்கு முன்னர் சமுக வலைத்தளத்தில் பார்த்த ஒருவரை அந்த பெண் காதலித்துள்ளார். அவருடன் வாழ்வதற்காக வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளார். ஜனவரி 7, 2015ல் கொல்கத்தாவில் பெண்ணின் காதலன் ராகுல், மற்றும் ராகுலின் நண்பர்,
அந்த பெண்ணை பாபுகாட் என்ற இடத்துக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து பீகாருக்கு கடத்தியிருக்கிறார். பீகாரில் கமல் என்ற கடத்தல் காரரிடம் 1.5 லட்சம் ரூபாய்க்கு விற்றிருக்கிறார். அங்கிருந்து அந்த பெண் உத்தர பிரதேசம் மாநிலம் பிஜ்னோரில் உள்ள சித்ரா என்பவரிடம் விற்கப்பட்டுள்ளார்.
பாலியல் வன்கொடுமை
45 வயது நபரான சித்ரா அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி திருமணம் செய்துள்ளார். சித்ராவின் மகனால் அந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். சித்ராவின் மொபைல் போனிலிருந்து போன் செய்வதற்கு அந்த பெண்ணுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அப்போது அம்மாவுக்கு கால் செய்த அவர் தனது இருப்பிடம் பற்றியத் தகவலைக் கூறியுள்ளார். பெண்ணின் இருப்பிடத்தைக் கண்டறிந்து அங்கு சென்ற சிஐடி அதிகாரிகள் ஒரு ரயில் நிலையத்தின் மூலையில் அவர் அவல நிலையில் கிடந்ததைப் பார்த்திருக்கின்றனர்.
மனநல பாதிப்பு
காதலனால் கடத்திச் செல்லப்பட்ட நான்கு மாதங்களுக்கு பிறகு மே 2015ல் அவர் மீட்கப்பட்டார்.
அதிகாரிகள் கண்டுபிடித்த போது அந்த பெண் பேச முடியாத நிலையில் இருந்திருக்கிறார்.
துயர நிகழ்வுகளால் மனநல பாதிப்படைந்திருந்த அவர், மனநல ஆலோசகரிடம் அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்ற பின்னர் தான் மனமுடைந்து தனக்கு நடந்தவற்றைக் கூறியிருக்கிறார்.
ஏழு வருடங்களுக்கு கழித்து இப்போது அந்த பெண் பள்ளிப்படிப்பை நிறைவு செய்து கல்லூரிக்கு செல்ல தயாராகவும் ஆர்வமாகவும் உள்ளார்.