இந்த தேதியை மிஸ் பண்ணாதீங்க; 7 கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசயம் - எப்படி பார்ப்பது?

India World
By Karthikraja Feb 22, 2025 12:30 PM GMT
Report

7 கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணி வகுக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.

அரிய நிகழ்வு

பிரபஞ்சத்தில் ஏராளமான அதிசய நிகழ்வுகளும் அவ்வப்போது நடந்துக்கொண்டு உள்ளது. ஆனால், சில அரிய நிகழ்வுகள் பல வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும். 

ஒரே நேர்கோட்டில் 7 கோள்கள்

அப்படியான ஒரு நிகழ்வு வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வை அன்று தவற விட்டால் மீண்டும் 2040 ஆம் ஆண்டு தான் நடைபெறும் என நாசா தெரிவித்துள்ளது. 

ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு ஈக்களை அனுப்பும் இஸ்ரோ - என்ன காரணம் தெரியுமா?

ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு ஈக்களை அனுப்பும் இஸ்ரோ - என்ன காரணம் தெரியுமா?

7 கோள்கள்

சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்து கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. அனைத்து கோள்களும் சூரியனின் ஒரு பக்கத்தில் ஒரு நேர்கோட்டில் சீரமைக்கப்படும்போது, ​​அனைத்து கோள்களும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பது போல் நமக்குத் தோன்றும், இது கிரக அணிவகுப்பு என அழைக்கப்படுகிறது. 

7 planets alignment tamilnadu

பிப்ரவரி 28 ஆம் தேதியன்று புதன் (Mercury), வெள்ளி (Venus), செவ்வாய் (Mars), வியாழன் (Jupiter), சனி (Saturn), யுரேனஸ், நெப்டியூன் உள்ளிட்ட 7 கோள்கள் ஒரே நேர்கோட்டில் வர உள்ளன. வானிலை தெளிவாக இருந்தால் இதில் 5 கோள்களை வெற்றுக்கண்ணால் பார்க்க முடியும். யுரேனஸ் மற்றும் நெப்டியூன் பூமியிலிருந்து அதிக தூரம் இருப்பதால், அவற்றை தொலைநோக்கி மூலமாக மட்டுமே பார்க்க முடியும்.

ஜோதிடர்கள் அறிவுரை

இந்த காட்சியை சூரிய மறைவிற்கு பின்னர் 45 நிமிடங்களுக்கு காணலாம் என கூறப்படுகிறது. மேலும், உத்திரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள கும்ப மேளா அம்மாவாசையான 28ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில் அந்த நாளில் லட்சக்கணக்கான மக்கள் இந்த காட்சியை நேரில் கண்டு நீராட உள்ளனர்.

இது வெறும் பார்ப்பதற்கு அபூர்வமான நிகழ்வாக மட்டுமல்லாமல், மக்கள் தங்களது வாழ்நாள் இலக்குகளை அடைய தீவிரமாக செயல்படுவது, இலக்குகளை தீர்மானிப்பது போன்ற செயல்களை செய்வது பலனளிக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.