நெருங்கும் சூரிய காந்த புயல் - பூமியில் இண்டெர்நெட் சேவை பாதிக்கப்படும்: பொதுமக்கள் அதிர்ச்சி

warning solar magnetic storm earth affect internet stop
By Anupriyamkumaresan Aug 29, 2021 07:23 AM GMT
Report

சூரியனில் ஏற்படும் காந்தப்புயலால் இணைய சேவை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர் சங்கீதா அப்து ஜோதி என்பவர் இது குறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் சூரியனிலிருந்து வெளியாகும் அதிக சக்தி வாய்ந்த காந்த புயல் பூமியின் மின் காந்த் அலைகளில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.

நெருங்கும் சூரிய காந்த புயல் - பூமியில் இண்டெர்நெட் சேவை பாதிக்கப்படும்: பொதுமக்கள் அதிர்ச்சி | Solar Magnetic Storm Earth Affect Internet Stopped

அடுத்த 10 ஆண்டுகளில் சூரிய புயலின் அளவு ஒன்றரை விழுக்காட்டில் இருந்து 12 விழுக்காடு வரை உயரும் என எச்சரித்துள்ளார். இதனால் தொலை தொடர்பு, செயற்கை கோள் போன்றவற்றில் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும் என தெரிவித்துள்ளார்.