இன்று முழு சூரிய கிரகணம் : இந்தியாவில் தெரியாது என அறிவிப்பு
இந்த ஆண்டின் 4வது மற்றும் கடைசி முழு சூரிய கிரகணம் இன்று நிகழவுள்ளது.
சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் கடக்கும்போது சூரியன் மறைக்கப்படுவதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்திய நேரப்படி இன்று காலை 10.59 மணி முதல் பிற்பகல் 3.07 மணி வரை சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
ஆனால் இதை இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது. அண்டார்டிகா, தென்ஆப்பிரிக்கா, தெற்கு ஆஸ்திரேலியா, தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல், தென்னிந்திய பெருங்கடல் ஆகிய பகுதிகளில் இருந்து பார்க்கலாம் என்று இந்திய கோளரங்க இயக்குனர் ரகுநந்தன் குமார் தெரிவித்தார்.
இந்தியாவில் தெரிந்த கடைசி சூரிய கிரகணம் கடந்த ஆண்டு ஜூன் 21ஆம் தேதி ஏற்பட்டது. இனிமேல், அடுத்த ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி ஏற்படும் சூரிய கிரகணம் தான் இந்தியாவில் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர் படுகொலை - காவல்துறையினரால் சுட்டு கொல்லப்பட்ட துப்பாக்கிதாரிகள் : மறைக்கப்படும் உண்மைகள் IBC Tamil
