நெருங்கும் சூரியகாந்தப் புயல் பாதிப்பு யாருக்கு ? : வெளியான அதிர்ச்சி தகவல்
100 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் சூரிய காந்தப் புயலால் உலகம் முழுவதும் இன்டர்நெட் முடங்க வாய்ப்பிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சூரியனில் இருந்து வரும் அதிகமான காந்தத் துகள்கள் வெறியேறி பூமியை நோக்கி பொழிவதே சூரியகாந்த புயல் என்று கூறுவார்கள்
இந்த சூரிய காந்த புயலால பூமியில் உள்ள மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால் செயற்கைக்கோள்கள் மற்றும் நீண்ட தூர கேபிள்கள் உள்ளிட்டவற்றை கடுமையாக பாதிக்கும் என கலிபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கூறியுள்ளது.
அந்த ஆய்வின்படி,கடந்த 1859 முதல் 1921 ஆம் ஆண்டு இந்த நிகழ்பு ஏற்பட்டுள்ளதாக வரை நிகழ்ந்ததாம். அச்சமயம் இன்டர்நெட் சேவை பெருமளவு வளர்ச்சி அடையாததால் அப்போது பாதிப்பு ஏதும் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. மின் துண்டிப்பு மற்றும் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
இணைய வசதி இல்லாமல் ஏதுமில்லை என்கிற இக்காலகட்டத்தில் சூரிய காந்தப்புயல் நேர்ந்தால் உலகம் முழுவதும் இணைய பேரழிவு உண்டாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
Yesterday, there was a nice filament eruption in the northern hemisphere followed by a jet-like eruption from AR 12860 (south). But no clear signatures were found in coronagraph images. The fast narrow CME may have been too early for the second event. Let me know what you think. pic.twitter.com/GE87Sxbcte
— Halo CME (@halocme) August 30, 2021
இந்த சூரிய காந்தப்புயல் கடலுக்கு அடியில் உள்ள இணைய கேபிள்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பலுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது. ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் பாதிக்கப்படாது. எனினும் அமெரிக்கா – ஆசிய நாடுகளுக்கு இடையேயான இணையத் தொடர்பு கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அமெரிக்காவுக்கு பில்லியன் டாலர் கணக்கில் இழப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.