மீண்டும் நிலச்சரிவு: மண்ணுக்குள் புதைந்த 40 பேரின் நிலை என்ன?
இமாச்சல பிரதேச மாநிலத்தின் கின்னௌர் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 40 பேர் புதைந்து போயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஒரு பேருந்து உட்பட நிறைய வாகனங்கள் மண்ணுக்குள் புதையுண்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இமாச்சல பிரதேச அரசு மாநில அரசுக்கு சொந்தமான அந்த பேருந்தில் மட்டுமே 40 பயணிகள் பயணித்துள்ளனர்.
நிகழ்விடத்தில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளூர் மீட்பு படை அதிகாரிகளுடன்
இணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த மாநிலத்தில் சுற்றுச்சூழல் பாதிப்புகளை அதிகம் எதிர்கொண்டு வரும் மாவட்டமாக மாறி நிற்கிறது கின்னௌர்.
அந்த மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூரிடம் தொலைபேசி மூலம் பேசி நிலைமை குறித்து தெரிந்துக் கொண்டுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.