‘’ சாப்ட்வேர் இன்ஜினியர் வரணே வேண்டாம்” - வைரலாகும் மேட்ரிமோனியல் விளம்பரம்

Viral Photos
By Irumporai Sep 22, 2022 03:31 AM GMT
Report

சாப்ட்வேர் இன்ஜினியர்கள் தயவுசெய்து தொடர்புகொள்ளாதீர்" என்ற மேட்ரிமோனியல் விளம்பரம் இணையத்தில் வைரலானதையடுத்து பல்வேறு தரப்பினர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மேட்ரிமோனி திருமணம்

எல்லாமே டிஜிட்டல் மயமானதால் மக்கள் தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேடும் முறை மாறியுள்ளது. திருமணத்திற்கு இணையம் வழியே வரன் தேடி வருகின்றனர். மேட்ரிமோனி சைட்களில் தங்களின் விவரங்களை அளித்தும், எப்படி மணமகன் அல்லது மணமகள் வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றனர்.

பெரும்பாலும் திருமண விளம்பரங்களில் தங்களுக்கு என்ன தேவை என்று தெளிவான விவரங்களை கொடுத்திருப்பார்கள். அதில் சில அவ்வபோது விவாதத்திற்கு உள்ளாகும்.

‘’ சாப்ட்வேர் இன்ஜினியர் வரணே  வேண்டாம்” - வைரலாகும் மேட்ரிமோனியல் விளம்பரம் | Software Engineers Do Not Call Matrimonial Ad

சாப்ட்வேர் இன்ஜினியர் வேண்டாம்

அந்த வகையில் ஒரு திருமண விளம்பரத்தில் மென்பொருள் பொறியாளர்கள் தயவு செய்து தொடர்பு கொள்ள வேண்டாம் என்று குறிப்பிட்டு இருந்தது.

விளம்பரத்தின்படி, மணமகன் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆக இருக்க வேண்டும். மருத்துவர்/தொழிலதிபர். இந்த தேவைகள் தவிர, விளம்பரத்தின் முடிவில் "மென்பொருள் பொறியாளர்கள் தயவுசெய்து அழைக்க வேண்டாம்" என்று ஒரு சிறப்பு அறிவுறுத்தலும் உள்ளது.

ஏற்கனவே இன்ஜினியர்களுக்கு வேலையில்லை, ஒரு வேளை அதிஷ்ட வசமாக வேலை கிடைத்து, ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ என நம் கனவு பாடல் நினைவாக போகின்றது , என நிமைக்கும் நேரத்தில் தற்போது இப்படி ஒரு விளம்பரமா என சோகத்தில் உள்ளது 90 ஸ் கிட்ஸ் சங்கம் இந்த நிலையில் தற்போது இந்த விளம்பரம் தான் தற்போது ட்விட்டரில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.