லுங்கி மற்றும் நைட்டிகள் அணிய தடையா? - வைரலாகும் வினோத அறிக்கை!

Uttar Pradesh
By Vinothini Jun 15, 2023 08:06 AM GMT
Report

நொய்டாவில் லுங்கிகள் மற்றும் நைட்டிகள் அணியகூடாது என்று வெளியிட்ட அறிக்கை வைரலாகி வருகிறது.

அறிக்கை

நொய்டாவில், கடந்த ஜூன் 10-ம் தேதி, ஹிம்சாகர் அபார்ட்மெண்ட் AOA குடியிருப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் குடியிருப்பாளர்கள் "லுங்கிகள் மற்றும் நைட்டிகள்" அணிந்து தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று நோட்டீஸில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

society-banned-nighties-and-lungies

இது "குடியிருப்பின் வளாகத்தில் நடப்பதற்கான ஆடைக் குறியீடு" என்ற தலைப்பில் அறிவிப்பு கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஃபை-2 பகுதியில் உள்ள ஹிம்சாகர் சொசைட்டியின் குடியிருப்போர் னால சங்கம் (RWA) இந்த அறிக்கையை வெளியிட்டது.

தற்போது இந்த அறிக்கை வைரலாகி பல விமர்சனங்களை பெற்று வருகிறது.

பேட்டி

இந்நிலையில், அந்த குடியிருப்பில் இருக்கும் ஒருவர் கூறுகையில், "நீங்கள் குடியிருப்பில் எந்த நேரத்திலும் சுற்றித் திரிந்தாலும், உங்கள் நடத்தை மற்றும் உடையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

society-banned-nighties-and-lungies

எனவே உங்கள் ஆட்சேபிக்க தகுந்த உடை அணிந்ததன் காரணமாக விமர்சனம் செய்ய ஒருவருக்கு வாய்ப்பளிக்கக்கூடாது என்பது உங்கள் அனைவரிடமிருந்தும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அனைவரும் வீட்டு உடைகளான லுங்கி, நைட்டி அணிந்து வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.