70 ஆயிரம் பேரின் கணக்குகளை முடக்கிய ட்விட்டர்- காரணம் என்ன?
அமெரிக்க அதிபர் டிரம்பின் கருத்துக்கள் நடந்த தேர்தலில் தோல்வி அடைந்த பின் உண்மைக்கு மாறான பல கருத்துகளாகவும் சில வன்முறையை தூண்டும் வகையில் இருந்ததால்.
அவரது கணக்கை நிரந்தரமாக டுவிட்டர் நிர்வாகம் நீக்கியது. இதனால் டுவிட்டர் நிறுவனத்தின் பங்குகள் சரிந்து சுமார் 40 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் டிரம்பின் ட்விட்டர் கணக்கை நீக்கியது போலவே அவரது ஆதரவாளர்கள் 70 ஆயிரம் பேரின் ட்விட்டர் கணக்கையும் டுவிட்டர் நிர்வாகம் நிறுத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒருவரே பல கணக்குகள் வைத்திருந்ததாகவும், மாறி மாறி சர்ச்சை கருத்துகளை பதிவு செய்து வருவதால் அவர்களது டுவிட்டர் கணக்குகளை மொத்தமாக நீக்க இருப்பதாக டுவிட்டர் நிர்வாகம் கூறியுள்ளது.