இலங்கையில் மீண்டும் சமூக வலைத்தள சேவை

srilanka SocialMedia SriLankaCrisis
By Irumporai Apr 03, 2022 11:12 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

இலங்கையில் மூடப்பட்டிருந்த சமூக வலைத்தள சேவை மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது என தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.

இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு காரணமாக விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக, 13 மணி நேர மின்வெட்டு மக்களை முற்றிலுமாக முடக்கியுள்ளது. இதற்கிடையில், இலங்கையில் நேற்று முன்தினம் முதல் பொது அவசரநிலை  அமலில் உள்ளது.

குறிப்பாக பொருளாதார நெருக்கடி காரணமாக மாபெரும் போராட்டத்திற்கு இலங்கை மக்கள் அழைப்பு விடுத்திருந்த நிலையில், இலங்கையில் நேற்று மாலை 6 மணி முதல் வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களை இலங்கை அரசு முடக்கிய நிலையில், இலங்கையில் மூடப்பட்டிருந்த சமூக வலைத்தள சேவை மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது என தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.