Flying kiss கொடுத்த ராகுல் காந்தி - பாஜக பெண் அமைச்சர் சபாநாயகரிடம் புகார்
இன்று பரபரப்பாக இருக்கும் நாடாளுமன்றத்தில் தனக்கு ராகுல் காந்தி flying kiss கொடுத்து மரியாதையற்ற வகையில் நடந்து கொண்டார் என பாஜகவை சேர்ந்த அமைச்சர் ஷோபா கரந்தலாஜே சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளார்.
பரபரப்பான நாடாளுமன்றம்

மணிப்பூர் கலவரத்தை அடுத்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளனர். இரண்டாவது நாளாக இன்று இது குறித்து விவாதம் நடைபெற்ற நிலையில், நாடாளுமன்ற பரபரப்பானது.
ஆவேசமான ராகுல் காந்தி

மீண்டும் எம்.பியாகி நேற்று நாடாளுமன்றம் வந்த காங்கிரஸின் ராகுல் காந்தி இன்று இந்த விவாதத்தின் போது, கடுமையான எதிர்ப்புகளை பிரதமருக்கு முன்வைத்தார். பாரத மாதாவை கொன்று விட்டீர்கள் என்றும் நீங்கள் தேச பக்தர்கள் அல்ல, தேச துரோகிகள் என்றும் ராகுல் ஆவேசமாக உரையாற்றினார்.
பாஜக பெண் அமைச்சர் புகார்
இதற்கிடையில், தான் தற்போது ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் மரியாதையற்ற வகையில், flying kiss கொடுப்பது போல சைகை செய்ததாக பாஜகவை சேர்ந்த பெண் அமைச்சர் ஷோபா கரந்தலாஜே சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளார்.

கர்நாடக மாநில உடுப்பி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஷோபா கரந்தலாஜே, மத்திய அமைச்சரவையில் மாநில விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan