நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைக்கும் பழக்கம் இருக்கா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
சிறுநீரை அதிக நேரம் அடக்கி வைப்பதால் ஏற்படும் பாதிப்பு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சிறுநீர்
நீண்ட தூரப் பயணத்தின்போதோ அல்லது அலுவலக பணியின் போது சிறுநீர் கழிப்பதைக் கொஞ்ச நேரம் அடக்கி வைப்போம். இப்படிச் செய்வதால் பல ஆரோக்கியப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .
அதிக நேரம் சிறுநீரை வைத்திருப்பதால் சிறுநீர்ப்பை தசைகளைப் பலவீனப்படுத்தும். சிறுநீர்ப்பை தசைகள் பலவீனம் அடைந்தால் சிரிக்கும்போது, இருமும்போது அல்லது தூக்கத்தில் கூட சிறுநீர் கசிவு ஏற்படலாம்.
ஆபத்து
நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருப்பது சிறுநீர் பாதை நோய்த்தொற்றுக்கான (UTI) ஆபத்தை அதிகரிக்கும். சிறுநீர்ப் பையில் அதிக நேரம் சிறுநீர் இருக்கும்போது, சிறுநீரில் உள்ள தாத்துக்கள் படிகமாகி, சிறுநீர் பையில் கற்களை உருவாக்கும்.
இது சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, சிறுநீரில் ரத்தம் கலந்து வருதல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். சில ஆய்வுகளில், நீண்ட காலமாகச் சிறுநீரை அடக்கிக்கொள்வது சிறுநீர்ப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.