காஷ்மீரில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்... - வைரலாகும் புகைப்படம்..!

India's Republic Day Viral Photos Jammu And Kashmir
By Nandhini Jan 26, 2023 11:02 AM GMT
Report

ஜம்மு காஷ்மீர் பனிப்பொழிவுக்கு மத்தியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

டெல்லி குடியரசு தின விழா

இந்திய நாட்டின் 74வது குடியரசு தின விழா உலகமும் முழுவதும் உள்ள இந்தியர்களால் கொண்டாப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள கடமைப்பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி தொடங்கி வைத்தார். இதன் பிறகு, அணி வகுப்பு காலை 10.30 மணிக்கு தொடங்கியது.

குடியரசுத் தின விழாவில் தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பை நடைபெற்றது. டெல்லி குடியரசு தின விழாவில், தமிழ்நாடு அலங்கார ஊர்தி கம்பீரமாக அணிவகுத்து வந்தது.

snowfall-republic-day-celebration-jammu-kashmir

பனிப்பொழிவுக்கு மத்தியில் கொண்டாட்டம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கில் பனிப்பொழிவுக்கு மத்தியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

மேலும், ஸ்ரீநகரில் உள்ள டிஆர்சி சௌக்கிலிருந்து லால் சௌக் வரை அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் 'திரங்கா பேரணி' நடைபெற்றது.