புது வெள்ளை மழை.. முதல் முறை பாலைவனத்தில் பனி பொழிந்த அதிசயம் - எங்கு தெரியுமா?

Viral Video Saudi Arabia World Social Media
By Swetha Nov 08, 2024 11:00 AM GMT
Report

முதல் முறை பாலைவனத்தில் பனி பொழிந்து இருப்பதை கண்டு ஆய்வாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பனி பொழிவு

உலகில் உள்ள ஒவ்வொரும் நாடுகளும் அதன் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதுப்போல் ஒருவித தட்பவெப்பத்தை கொண்டுள்ளது. அதாவது பெரும்பாலான நேரங்களில் ஐரோப்பிய நாடுகள் குளிராகவும், அரபு நாடுகள் வெப்பம் சற்று அதிகரித்து காணப்படுவது வழக்கம்தான்.

புது வெள்ளை மழை.. முதல் முறை பாலைவனத்தில் பனி பொழிந்த அதிசயம் - எங்கு தெரியுமா? | Snowfall In Saudi Arabian Desert For First Time

அந்த வகையில், சவுதி அரேபியா வெயில் சூழ்ந்த வெப்பமிகுந்த நாடு என்று நாம் அறிந்ததுதான். அப்படி சுட்டெரிக்கும் வெயில் கொண்ட சவுதி அரேபியாவில் இரவு நேரங்களில் கடும் குளிர் வீசினாலும், இதுவரை பனிப்பொழிவு என்பது அந்நாட்டு வரலாற்றில் நிகழ்ந்ததே இல்லை.

ஆனால் தற்போது முதல் முறையாக சவுதி அரேபியா வரலாற்றில் பனிப்பொழிவு அரங்கேறியுள்ளது. சவுதி அரேபியாவில் அமைந்துள்ளது அல்- ஜாஃப் மாகாணத்தில் கடந்த வாரம் முதல் ஆலங்கட்டி மழையுடன் கூடிய கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

உத்தரகாண்டில் திடீரென பொழிந்த பனி மழை... - ஜாலியா என்ஜாய் பண்ண மக்கள்..! வைரலாகும் வீடியோ

உத்தரகாண்டில் திடீரென பொழிந்த பனி மழை... - ஜாலியா என்ஜாய் பண்ண மக்கள்..! வைரலாகும் வீடியோ

பாலைவனத்தில்..

அது பனிபொழிவாக மாறி பொழிந்து அந்த பகுதியில் உள்ள பாலைவனம் முழுவதும் பனிக்கட்டிகளால் மூடப்பட்டுள்ளது. மணல்களால் மட்டுமே காட்சி தந்த சவுதி அரேபியா பாலைவனம் வெள்ளை நிற கம்பலம் விரித்ததுப்போல் காட்சியளிக்கிறது.

இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களின் வேகமாக பரவி வைரலாகியுள்ளது. இந்த சம்பவம் அந்த நாட்டு மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வானிலை ஆய்வு மையம் கூறியதாவது,

அரேபிய கடலில் இருந்து உருவாகி ஓமன் வரை பரவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமே சமீபத்தில் பெய்த ஆலங்கட்டி மழைக்கு காரணணம் என்று தெரிவித்துள்ளனர். ஈரப்பதம் நிறைந்த காற்று வறண்ட பகுதிக்கு வந்ததன் விளைவாக வானிலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.