video live இருக்கும்போது மனைவிக்கு முத்தம் கொடுத்த சினேகன் - வைரலாகும் வீடியோ - கடுப்பான ரசிகர்கள்
தமிழ்த் திரையுலகில் முன்னணிப் பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். இவர் 700-க்கும் மேற்பட்ட படங்களில் சுமார் 2500-க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார்.
இவருடைய பல பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகின்றன. பாடலாசிரியராக மட்டுமன்றி, மக்கள் நீதி மய்யத்தில் இளைஞரணி மாநிலச் செயலாளராகவும் இருந்து வருகிறார்.
சினேகனும் நடிகை கன்னிகா ரவியும் சில ஆண்டுகளாகவே காதலித்து வந்தனர். இவர்கள் காதலுக்கு அவர்கள் குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்கவே, சமீபத்தில் சென்னையில் நடிகர் கமல்ஹாசன் தலைமையில் திருமணம் செய்துகொண்டனர்.
சீர்திருத்த முறையில் நடைபெற்ற இந்த திருமணத்தில், திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றனர். இதனையடுத்து, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சினேகன் கலந்து கொண்டார்.
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், கன்னிகா சினேகனிடம் இந்த ஓவியம் எப்படி இருக்கிறது என்று கேட்கிறார். அதற்கு சினேகன் எப்பவுமே உன் இதயம் மாதிரி அழகாக இருக்கிறது என்று ரொமாண்ட் மூடில் கன்னிகாவிற்கு முத்தம் கொடுக்கிறார்.
இதற்கு கன்னிகா.. அய்யோ... லைவ்ல இப்படி முத்தம் கொடுக்காதீங்க... கெட்ட கெட்ட வார்த்தையால திட்டுறாங்க... கட்.. கட்.. என்று கூறுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் என்னய்யா... அங்க நடக்குது... நாங்கல்லாம் சிங்கிள்... வெறுப்பேத்தாதீங்க என்று வழக்கம்போல கமெண்ட் செய்து வருகின்றனர்.
#Snegan #Kannika Romaanse ??? pic.twitter.com/Pij2EtaxVz
— chettyrajubhai (@chettyrajubhai) May 19, 2022