பெயருக்கு களங்கம்.. சின்னத்திரை நடிகை மீது சினேகன் புகார்!

Only Kollywood Snehan
By Sumathi Aug 06, 2022 06:28 AM GMT
Report

தனது அறக்கட்டளையின் பெயரில் பண மோசடி செய்ததாக சின்னத்திரை நடிகை மீது கவிஞர் சினேகன் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கவிஞர் சினேகன்

தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமான சினேகன், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் முக்கிய பொறுப்பில் உள்ளார்.

பெயருக்கு களங்கம்.. சின்னத்திரை நடிகை மீது சினேகன் புகார்! | Snehan Accused Actress Jeyalaxmi

இவர் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் சினேகன் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்நிலையில் தன்னுடைய அறக்கட்டளையின் பெயரில் போலி சமூக வலைதள பக்கங்கள் தொடங்கி சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி பணம் வசூல் செய்து வருவதாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சினேகன் புகார் அளித்துள்ளார்.

 அறக்கட்டளை

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சில தினங்களுக்கு முன்பாக தன்னுடைய நண்பர்கள் தன்னுடைய அறக்கட்டளை பெயரில் சமூக வலைதள கணக்குகள் மூலம் பொது மக்களிடம் பணம் கேட்டு வருவதாக தெரிவித்தனர்.

பெயருக்கு களங்கம்.. சின்னத்திரை நடிகை மீது சினேகன் புகார்! | Snehan Accused Actress Jeyalaxmi

மேலும், அடுத்த சில தினங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள், பொதுமக்களிடம் தன்னுடைய அறக்கட்டளை பெயரில் பணம் பெறுவது குறித்து தன்னிடம் விசாரணை நடத்தினர்.

 நடிகை ஜெயலட்சுமி

இதனையடுத்து சம்பந்தப்பட்ட இணையதளத்தில் உள்ள முகவரியை 2 முறை சட்டப்படி விளக்கம் கேட்டு கடிதம் எழுதியும், எந்த பதிலும் வரவில்லை. அதில் கொடுக்கப்பட்டிருந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு பேசிய போது தன்னை பொதுவெளியில் சந்திக்க வேண்டும் என அவர் கூறினார்.

இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள முகவரியை சென்று ஆய்வு செய்தபோது அங்கு அப்படி ஒரு அலுவலகமே. எனது அறக்கட்டளையின் பெயரில் தொடங்கப்பட்ட சமூக வலைதளத்தை ஆராய்ந்த போது அதில் சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமியின் பெயர் இடம் பெற்றிருந்தது.

மேலும், அவர் வழக்கறிஞர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தி தனது அறக்கட்டளையின் பெயருக்கு களங்கம் ஏற்படாமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.