ஜிம்முக்கு போன நடிகை சினேகாவின் நிலைமை என்ன தெரியுமா?

1 month ago

நடிகை சினேகா ஜிம்மில் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

தமிழ் சினிமா ரசிகர்களால் சிரிப்பழகி என அழைக்கப்பட்ட நடிகை சினேகா 2001 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கமல்,விஜய், அஜித், விக்ரம் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த அவர், நடிகர் பிரசன்னாவை காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். 

இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் திருமணத்திற்கு பின் சினேகா குறிப்பிடத்தக்க படங்களில் மட்டுமே நடித்து வந்தார். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன், தனுஷின் பட்டாஸ் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். இதனிடையே தொடர்ந்து அவர் திரைப்படங்களில் நடிக்க விரும்பியதால், உடல் பருமனை குறைக்க முயற்சியில் ஈடுபட்டு வந்தார். 

இதற்காக ஜிம்முக்கு போய் கடுமையான பயிற்சிகள் செய்ததன் மூலம் அவருடைய உடல் எடை 7 கிலோ குறைந்தது. மேலும் எடையை குறைப்பதில் அவர் தீவிரம் காட்டி வருகிறார். தற்போது அவர் முன்பிருந்தது போல் சிரிப்பழகி சினேகாவாக தெரிகிறார். இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 


உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்