ஜிம்முக்கு போன நடிகை சினேகாவின் நிலைமை என்ன தெரியுமா?
நடிகை சினேகா ஜிம்மில் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமா ரசிகர்களால் சிரிப்பழகி என அழைக்கப்பட்ட நடிகை சினேகா 2001 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கமல்,விஜய், அஜித், விக்ரம் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த அவர், நடிகர் பிரசன்னாவை காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.
இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் திருமணத்திற்கு பின் சினேகா குறிப்பிடத்தக்க படங்களில் மட்டுமே நடித்து வந்தார். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன், தனுஷின் பட்டாஸ் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். இதனிடையே தொடர்ந்து அவர் திரைப்படங்களில் நடிக்க விரும்பியதால், உடல் பருமனை குறைக்க முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.
இதற்காக ஜிம்முக்கு போய் கடுமையான பயிற்சிகள் செய்ததன் மூலம் அவருடைய உடல் எடை 7 கிலோ குறைந்தது. மேலும் எடையை குறைப்பதில் அவர் தீவிரம் காட்டி வருகிறார். தற்போது அவர் முன்பிருந்தது போல் சிரிப்பழகி சினேகாவாக தெரிகிறார். இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
வெளிநாட்டுப் பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு மோசடி! குற்றப்புலனாய்வு திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை IBC Tamil
நாளை நான் இருப்பேனா...? மறைவுக்கு சில நாட்களுக்கு முன் நானா படேகர் பேசிய வார்த்தைகள் வைரல்! Manithan
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan