காலு உடைஞ்சு கிடந்தும் அந்த இயக்குநர் என்னை விடவில்லை - சிநேகா ஓபன்டாக்!
புதுப்பேட்டை படம் குறித்து சினேகா பகிர்ந்துள்ள தகவல் கவனம் பெற்றுள்ளது.
நடிகை சினேகா
நடிகை சினேகா சினிமா வாழ்க்கையில் நடந்த சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். பேட்டி ஒன்றில் பேசிய அவர்,
படத்துக்காக எனக்கு கரு.பழனியப்பன் கதை சொல்லும் போது நான் அக்சிடெண்ட் ஆகி படுத்து இருக்கேன். அந்த சமயத்துலயும் விடாம என்கிட்ட கதை சொல்றாரு.
புதுப்பேட்டை
இன்னும் 2 மாசத்துல முழுசா குணமாகி வந்துடுவிங்கன்னு சொல்லிட்டு போறாரு. அவரு சொன்ன மாதிரியே கரெக்டா 2 மாசத்துக்கு அப்புறம் நான் ஏப்ரல் மாதம் படத்தோட ஷூட்டிங் போறேன். புதுப்பேட்டை படத்துக்கான கதைய நான் என் அப்பாவோட போய் கேட்டேன்.
இந்த கதைய கேட்ட உடனே எனக்கு ஒரு மாதிரி தயக்கமா இருந்தது. அதபத்தி நான் யோசிச்சிட்டே இருந்தேன். அப்போ என் அப்பா தான் நெறைய இந்தி படத்தோட நடிகைங்க பத்தி எல்லாம் சொல்லி இவ்ளோ பேர் உனக்கு முன்னாடி இந்த மாதிரி கேரக்டர்ல நடச்சிருக்காங்க.
உன்ன எங்கயும் தப்பா காமிக்குற மாதிரி சீன் இல்ல. இனிமே படத்துல நடிக்கலாமா வேணாமான்னு நீயே யோசின்னு அப்பா சொல்லிட்டாரு. அப்பாவுக்கு இந்த கேரக்டர் பிடிச்சிருக்குன்னா இதுல ஏதொ ஒன்னு இருக்குன்னு நான் நடிச்சேன் எனத் தெரிவித்துள்ளார்.