விளம்பரத்திற்கே இவ்வளவு சம்பளமா? ஒரு நாளைக்கு இலட்சக்கணக்கில் புறளும் நடிகை சினேகா!
90களில் கொடிக்கட்டி முன்னணி நடிகையாக களம் கண்டவர் தான் நடிகை சினேகா. முன்னணி நடிகர்கள், இளம் நடிகர்களுடன் ஜோடிபோட்டு புன்னகை அரசி என்ற பெயரையும் பெற்றார். நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்தபின் படங்களில் நடிக்க நிறுத்திவிட்டார். தற்போது மீண்டும் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுத்து வருகிறார்.
அந்தவகையில், சினேகா கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படத்தில் நடித்திருந்தார். மேலும் சில தெலுங்கு படங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது உடல் எடையை குறைத்துள்ள சினேகாவுக்கு மீண்டும் வாய்ப்புகள் வரத் துவங்கியுள்ளன. பட வாய்ப்புகள் மட்டுமல்லாமல் விளம்பர படங்களிலும் நடிக்க அதிக வாய்ப்புகள் கிடைத்து வருகிறதாம்.
இந்நிலையில் சினேகா மீண்டும் தன்னுடைய மார்க்கெட் சூடுபிடிப்பதை அறிந்து தன்னுடைய சம்பளத்தை பல மடங்காக உயர்த்தி விட்டாராம்.
அந்த வகையில் விளம்பரப் படங்களில் நடிக்க ஒரு நாளைக்கு குறைந்தது 2 முதல் 3 லட்சம் வரை வாங்குகிறாராம். அதேபோல் படங்களில் குணசித்திர வேடங்களில் நடிப்பதற்கு ஒரு நாளைக்கு 10 முதல் 15 லட்சம் வரை வாங்குவதாக செய்திகள் வந்துள்ளன.