பாவம் பண்ணிட்டாங்க.. சர்ச்சையில் சிக்கிய நடிகை சினேகா- பிரசன்னா
பிரபல நட்சத்திர தம்பதிகளாக சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் கிரிவலப் பாதையில் செருப்புடன் நடந்து சென்றது சர்ச்சையாகியுள்ளது.
தமிழ்சினிமாவின் நட்சத்திர ஜோடிகளில் ஒருவர் சினேகா - பிரசன்னா, புன்னகை இளவரசி என ரசிகர்களால் கொண்டாடப்படும் சினேகாவுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
முன்னணி நடிகையாக வலம் வந்த சினேகா, தற்போது கதைக்கு ஏற்ற கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சினேகா- பிரசன்னா தம்பதியினர் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.
அதாவது, பங்குனி பிரதோஷத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் இருக்கும் அண்ணாமலையார் கோவிலுக்கு சென்றனர்.
அங்கு கிரிவலப்பாதையில் நடைப்பயணம் மேற்கொண்டனர், மனமுறுகி தேங்காய் உடைத்து வேண்டிக்கொண்ட தம்பதியினர் செருப்புடன் நடந்து சென்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதனை பெரும்பாவம் என ஒருதரப்பினர் கூறிவரும் நிலையில், மற்றொரு தரப்பினர் சினேகாவுக்கு ஆதரவாகவும் கருத்துகளை கூறிவருகின்றனர்.