விவாகரத்தை மதிக்கணும்; சினேகா - பிரசன்னா பளீச் பதில்!
பிரபலங்களின் விவாகரத்து குறித்து சினேகா - பிரசன்னா தம்பதியர் கருத்து தெரிவித்துள்ளனர்.
சினேகா - பிரசன்னா
நடிகை சினேகா படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் சினேகாலயா என்ற ஆடை வடிவமைப்பு மற்றும் விற்பனை நிலையத்தை நடத்தி வருகிறார்.
அதில் வரும் மார்கழி மாதம் பல்வேறு சபாக்களில் பாடுவதற்கு பாடகிகள் விதவிதமாக அதே நேரத்தில் புதிய டிசைன்களில் அணியும் வகையிலும் புடவைகளை தயாரித்துள்ளனர்.
விவாகரத்து?
இது தொடர்பான வெளியீட்டு மற்றும் அறிவிப்பு நிகழ்ச்சியை நடத்தினர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜோடி, ”திரை உலகினரின் வாழ்க்கையில் ஏற்படும் விவாகரத்து குறித்து அறிவுரை யாரும் வழங்க முடியாது. அது அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையாக உள்ளது. அதற்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்.
நல்ல புரிதல் இருந்தால் எந்த திருமண வாழ்க்கையும் நீடித்திருக்கும். நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் விரும்பினார்கள். கண்டிப்பாக நல்லது செய்வார் என நம்புகிறார்கள், நாங்களும் நம்புகிறோம்.
கடைசியாக தமிழில் பட்டாஸ் படத்தில் தான் நடிச்சிருந்தேன். அடுத்து ஐந்து வருடங்கள் கழித்து தான் தி கோட் படத்தில் பண்ணுனேன். நல்ல படம் கிடைத்தால் கண்டிப்பாக நான் பண்ணுவேன். ஆனால், இப்போதைக்கு சினேகாலயா சில்க்ஸில் பிஸியாக இருக்கேன் என சினேகா தெரிவித்துள்ளார்.