நடத்தையில் வந்த சந்தேகம் - நிச்சயத்துடன் நின்ற சினேகாவின் முதல் காதல்
நடிகை சினேகா பிரசன்னாவுடன் திருமண செய்து கொள்வதற்கு முன்பாக அவருக்கு தயாரிப்பாளர் ஒருவருடன் தொடர்பிருந்ததாக சினிமா விமர்சகர் பயில்வான் தெரிவித்துள்ளார்.
சினேகா
தமிழ் திரையுலகில் புன்னகை அரசி என தற்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகையாக வலம் வருபவர் சினேகா. 2000-ஆம் ஆண்டு வெளியான விரும்புகிறன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர் குறுகிய கலகட்டத்திலேயே தென்னிந்தியாவின் முன்னணி நாயகியாக முன்னேறினார்.
புகழ் வெளிச்சத்தில் இருக்கும் போதே, நடிகர் பிரசன்னாவை காதலித்து கடந்த 2012-ஆம் ஆண்டு சினேகா திருமணம் செய்து கொண்டார். இவர்களது காதல் திருமணமாயினும், நடிகை சினேகா பிரசன்னாவிற்கு முன்பாக தயாரிப்பாளர் ஒருவருடன் திருமண நிச்சயம் ஆகியிருப்பதாக நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
பயில்வான் பேட்டி
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், பிரசன்னாவுக்கு முன்பே சினேகா பிரபல தயாரிப்பாளர் ஒருவரை காதலித்தார் என்றும் அவர் தயாரிப்பாளர் நாக் ராவி என தெரிவித்தார்.ஒரு கட்டத்திற்கு மேல் சென்றதால் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருவரும் நிச்சயமும் செய்து கொண்டனர் என குறிப்பிட்ட பயில்வான், நிச்சயத்தில் இருவரும் அப்போதே வைர மோதிரம் மாற்றிக் கொண்டார்கள் என்றும் தகவல் அளித்தார்.
ஆனால் நிச்சயதார்த்தத்திற்கு பிறகு காதலரின் நடவடிக்கைகளில் சிநேகாவிற்கு சந்தேகங்கள் ஏற்பட்டு, காதலர் தனக்கு உண்மையான நபராக இல்லை என தெரிந்து கொண்டதன் காரணமாக நிச்சயதார்த்தத்துடன் அந்த பந்தத்தை சினேகா முறித்து விட்டார் என கூறினார்.