பைக்கில் சென்ற பெண்ணிடம் துப்பாக்கியை காட்டி நகை கொள்ளை - அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்

madhyapradresh gwaliorchainsnatch
By Petchi Avudaiappan Aug 27, 2021 11:22 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

 மத்தியப்பிரதேசத்தில் பெண்ணிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற பைக் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் பட்டப்பகலில் பெண் ஒருவர் தனது மகனை டியூஷனில் விட பைக்கில் சென்று கொண்டிருக்கிறார். அப்போது அதே சாலையில் பைக்கில் வரும் இருவர் குறிப்பிட்ட சாலை முடியும் இடத்தில் பைக்கில் சென்ற பெண்ணை மடக்கி திருடர்களில் ஒருவன் துப்பாக்கியை காட்டுகிறான்.

பின்னர் அப்பெண்ணின் செயினை பறிக்க திருடன் முயல அவர் விட்டுக்கொடுக்காமல் கடுமையாக போராடுகிறார். இறுதியில் செயினை பறித்த திருடன் அங்கிருந்து தனது கூட்டாளியுடன் புறப்பட்டு செல்கிறான்.

இந்த காட்சிகள் மத்தியப்பிரதேசத்தை அதிர வைத்துள்ளது. இதுகுறித்து குவாலியரின் படவ்-காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.